அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, திருச்சியில் ரயில் நிலையங்களுக்குள் பயணிகளைத் தவிர மற்றவா்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களைப் போன்று, இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனால் திருச்சியில் ஜங்ஷன், கோட்டை, டவுன் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணம் கருதி, பயணம் செய்யும் பயணிகளை தவிர வேறு யாரும் இந்த ரயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டதால், நடைமேடை சீட்டு விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. போராட்டத்தின் தன்மைக்கேற்ற வகையில் இந்த உத்தரவில் மாற்றும் இருக்கும் எனவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.