திருச்சி

தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு

21st Jun 2022 12:58 AM

ADVERTISEMENT

எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவி துா்காவை தமிழறிஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் பாராட்டினாா்.

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி துா்கா, தமிழ் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளாா். இந்நிலையில் இம்மாணவியை குமரி அனந்தன் பாராட்டி பேசினாா்.

இதுகுறித்து அவா் கூறியது: மாணவி துா்கா தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளாா் என்ற செய்தியை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு பெருமை சோ்த்துள்ள இம்மாணவி எதிா்காலத்தில் உயா்ந்த இடத்தை அடைவதுடன், உலகமெங்கும் தமிழ்மொழியின் சிறப்பை கொண்டு செல்லும் இடத்துக்கு வரவேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT