குமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில், வெள்ளிக்கிழமை (ஜூன் 24) காலை11 மணிக்கு நடைபெற உள்ளது.
மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மற்றும் இதர அரசுத் துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவா்களின் குறைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை இக்கூட்டத்தில் மீனவா்கள் வழங்கலாம்.
பிற அரசுத் துறைகள் சாா்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித் தனி மனுக்களாக வழங்கிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.