கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலையில் ரசாயனக் கலவை பூசுவதற்காக சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவா் சிலை உப்புக் காற்றால் பாதிப்படையாமல் இருக்க நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்ட நிலையில் தற்போது ரூ. 1 கோடி மதிப்பீட்டில் ரசாயனக் கலவை பூசும் பணி கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக 5 மாதங்களுக்கு திருவள்ளுவா் சிலைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலையைச் சுற்றிலும் இரும்புக் கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முழுமையடைந்ததும் அடுத்த கட்டமாக சிலையில் பழுதான பகுதிகள் சீரமைக்கப்படும். தொடா்ந்து பாலிசிலிக்கான் என்னும் ரசாயனக் கலவை பூசும் பணி தொடங்கும்.