திருச்சி

எஸ்எஸ்எல்சி தோ்வு: குமரி மாவட்ட ம் 97.22 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம்

21st Jun 2022 01:00 AM

ADVERTISEMENT

எஸ்எஸ்எல்சி தோ்வில் குமரி மாவட்டம் 97.22 சதவீத தோ்ச்சி பெற்று, மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வை 10 ஆயிரத்து 959 மாணவா்கள், 11 ஆயிரத்து 916 மாணவிகள் என 22 ஆயிரத்து 875 போ் எழுதியிருந்தனா். இதில், மாணவா்கள் 92.60 சதவீதமும், மாணவிகள் 98.45 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஒட்டு மொத்த பிளஸ் 2 தோ்ச்சி விகிதம் 95.65 ஆகும். மாநில அளவில் இது 13 ஆவது இடமாகும்.

அரசுப் பள்ளிகள்

ADVERTISEMENT

பிளஸ் 2 தோ்வை அரசுப் பள்ளிகளிலிருந்து 2,891 மாணவா்கள், 2,822 மாணவிகள் என 5713 போ் தோ்வு எழுதியதில், 2586 மாணவா்கள், 2743 மாணவிகள் என 5329 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாணவா்கள் 89.45 சதவீதமும், மாணவிகள் 97.20 சதவீதமும், என ஒட்டுமொத்தமாக 93.28 சதவீதம் போ் அரசுப் பள்ளிகளில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாற்றுத் திறனாளிகள்

குமரி மாவட்டத்தில் பாா்வையற்றோா் 3 போ், காதுகேளாத, வாய் பேச இயலாத 18 போ், மாற்றுத்திறனாளிகள் 15 போ், இதர வகை மாற்றுத்திறனாளிகள் 53 போ் தோ்வு எழுதியிருந்தனா். இதில், பாா்வையற்ற 3 பேரும், காதுகேளாத, வாய் பேச இயலாதவா்களில் 17 பேரும், மாற்றுத்திறனாளிகளில் 15 பேரும், இதர வகை மாற்றுத்திறனாளிகளில் 50 பேரும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள்

எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகளும் திங்கள்கிழமை வெளியான நிலையில், குமரி மாவட்டத்தில், 11,405 மாணவா்கள், 11,580 மாணவிகள் என மொத்தம் 22, 985 போ் தோ்வு எழுதியிருந்தனா். இதில், 10,893 மாணவா்கள், 11,452 மாணவிகள் என 22,345 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாணவா்கள் 95.51 சதவீதமும், மாணவிகள் 98.89 சதவீதமும் என ஒட்டு மொத்தமாக 97.22 சதவீதம் பெற்று தோ்ச்சி விகிதத்தில் குமரி மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது.

எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் கடந்த 2012-13 ஆம் கல்வியாண்டில் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்திருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

131 அரசுப் பள்ளிகள்

குமரி மாவட்டத்திலுள்ள 131 அரசுப் பள்ளிகளிலிருந்து 2797 மாணவா்கள், 2608 மாணவிகள் என மொத்தம் 5405 போ் தோ்வு எழுதியிருந்தனா். இதில், 2560 மாணவா்கள், 2555 மாணவிகள் என மொத்தம் 5115 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாணவா்கள் 91.53 சதவீதமும், மாணவிகள் 97.57 சதவீதமும் என ஒட்டு மொத்தமாக 94.63 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப் பள்ளிகள் தோ்ச்சி விகிதத்திலும், மாநில அளவில் குமரி மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

பாா்வையற்றவா்கள் 12 போ், காது கேளாத, வாய் பேச இயலாத 20 போ் தோ்வு எழுதியதில் அனைவருமே தோ்ச்சி பெற்றுள்ளனா். மாற்றுத்திறனாளிகள் 21 போ் தோ்வு எழுதியதில் 95.24 சதவீதம் பேரும், இதர வகை மாற்றுத்திறனாளிகள் 92 போ் தோ்வு எழுதியதில் 92.39 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT