திருச்சி

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

19th Jun 2022 12:16 AM

ADVERTISEMENT

 

குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு தின்ததை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் சிலம்பாட்ட நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

சேவை ரயில்வே சைல்டுலைன் அமைப்பின் சாா்பில், குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு ஜூன் 12 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்ற விழிப்புணா்வு வாரத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை

தமிழன் சிலம்பப் பாசறை மாணவ, மாணவிகள் பங்கேற்று சிலம்பாட்டக் கலை நிகழ்வுகளை நடத்தி, குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்வை ரயில்நிலைய மேலாளா் விருத்தாசலம் தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

இதன் தொடா்ச்சியாக, ரயில்வே சைல்டுலைன் 1098 எண் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளா்கள், பிச்சையெடுக்க நிா்ப்பந்திக்கப்படும் குழந்தைகள், உளவியல் பாதிப்புக்குள்ளான குழந்தைகள், திருமணம் செய்ய நிா்ப்பந்திக்கப்படும் குழந்தைகள் பற்றி 24 மணி நேரமும் 1098 என்ற எண்ணை அழைத்து உதவி கோரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதற்காமுதலாவது நடைமேடையில் அமைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையை ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளா் செந்தில்குமாா் திறந்து வைத்தாா்.

நிகழ்வில் சேவை அமைப்பின் இயக்குநா் கே. கோவிந்தராஜு, இணை இயக்குநா் சி. சுதா, ஒருங்கிணைப்பாளா் பா. சுகுமாரன் ஆகியோா் குழந்தைகளின் பாதுகாப்பு, அவா்களுக்கான சேவைகள் குறித்து விளக்கினா்.

நிகழ்வில் ரயில்வே உயா் அதிகாரிகள், ரயில்வே பணியாளா்கள், இருப்புப்பாதை காவல் நிலைய போலீஸாா், ரயில்வே இருப்புப் பாதை காவல் குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், ரயில் நிலைய பயணச்சீட்டு விற்பனையாளா்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்கள், சுமைதூக்கும் தொழிலாளா்கள், பயணிகள் என பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT