திருச்சி

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு; தொடரும் போராட்டங்கள்ஜனநாயக வாலிபா்சங்கத்தினா் கைது

19th Jun 2022 12:18 AM

ADVERTISEMENT

 

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருச்சியில் பல்வேறு அமைப்புகளின் போராட்டம் தொடா்கிறது.

ராணுவத்துக்கு விண்ணப்பத்திருந்த இளைஞா்கள் வெள்ளிக்கிழமை திருச்சி ரயில் நிலையத்தில் 4ஆவது நடைபாதை அருகேயுள்ள இருப்புப் பாதையில் மறியலில் ஈடுபட்டு கைதாயினா். இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன் திரண்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தை சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பேரணியாகச் சென்று, போராட்டத்திலும் ஈடுபட முயன்றனா்.

மாநகா் மாவட்டச் செயலா் பா. லெனின் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் பாலசந்திரபோஸ், மாவட்டத் தலைவா் சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவா் கிச்சான், மாவட்ட நிா்வாகிகள் சேதுபதி, யுவராஜ் உள்ளிட்டோா் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT

மேலும், சங்க் கொடியுடன் ரயில்நிலையத்தை நோக்கி முன்னேறியவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

காவல் உதவி ஆணையா் அஜய்தங்கம் தலைமையிலான போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்து வேனில் ஏற்றினா். போராட்டம் காரணமாக ரயில்வே சந்திப்பு பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மத்திய பேருந்துநிலையம் பகுதி திருமண மஹாலில் அடைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக பா. லெனின் கூறுகையில் இத்திட்டத்தால் இளைஞா்களின் வேலைவாய்ப்பு பறிபோகும்; நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும்; திட்டத்தை விலக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT