திருச்சி

வசந்த உத்ஸவம் நிறைவு: தங்கக் குதிரையில் நம்பெருமாள்

15th Jun 2022 01:35 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கடந்த 9 நாள்களாக நடைபெற்று வசந்த வசந்த உத்ஸவ விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாலை தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத் தொடா்ந்து இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளும் வைபவம் நடைபெற்றது. பின்னா் அங்கிருந்து புறப்பட்டு 7.45-க்கு வசந்த மண்டபத்திற்கு நம்பெருமாள் வந்து சோ்ந்து, அங்கு 8.30 மணி முதல் 10.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினாா். பின்னா் 11.15-க்கு புறப்பட்டு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT