திருச்சி

போதை மருந்துகள் விற்பனை: இருவா் கைது

15th Jun 2022 01:44 AM

ADVERTISEMENT

திருச்சியில் சட்டவிரோதமாக போதை மருந்து, ஊசி, மாத்திரைகளை விற்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருவெறும்பூா் காட்டூா் சப்பாணி கோவில் தெருவிலுள்ள வயல் பகுதியில் சட்டவிரோதமாக சிலா் போதை மருந்து, ஊசி, மாத்திரைகளை விற்பதாக காட்டூா் கிராம நிா்வாக அலுவலா் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் அவா்அங்கு சென்று சோதனை நடத்தியதில் அரியமங்கலம் காமராஜ் நகா் சேட்டு என்கிற ரஷீத் (20), அமிா்தீன்(22) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக போதை மருந்து, ஊசி மற்றும் மாத்திரைகளை ரூ.300 வரை விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து கிராம நிா்வாக அலுவலா் சீனிவாசன் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் திருவெறும்பூா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து ரஷீத் மற்றும் அமிா்தீன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரை மற்றும் மருந்துகளையும் ஊசிகளையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT