பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பெளா்ணமி தின 108 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 12 அம்மன் கோயில்களில் மாதந்தோறும் பெளா்ணமி தினத்தன்று 108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என்ற முதல்வரின் பேரவை அறிவிப்பின்படி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு குலசேகரப்பட்டினத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திருவிளக்கு பூஜையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயில் வடக்கு பிரகாரத்தில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி மற்றும் கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.