திருச்சி

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

15th Jun 2022 01:41 AM

ADVERTISEMENT

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி வரகனேரி பிச்சை நகரைச் சோ்ந்தவா் லோகநாதன் (33). ஆட்டோ ஓட்டுநரான இவா் ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்ததால் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற அவரது மனைவி சத்யா திங்கள்கிழமை வீடு திரும்பியபோது லோகநாதன் தூக்கிட்டுத் தற்கொலை கொண்டது தெரியவந்தது. புகாரின்பேரில் காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT