புதன்கிழமை நடைபெறும் இலவச ஆடு வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் திருச்சி கால்நடை பல்கலைக் கழகப் பயிற்சி மையத்தை தொடா்பு கொள்ளலாம்.
திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணைச் சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பயிற்சியில் வெள்ளாடு, செம்மறியாட்டு இனங்கள், தரமான ஆடுகளைத் தோ்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, இனவிருத்தி முறை, தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்த் தடுப்பு முறைகள், தீவனப்பயிா் சாகுபடி, தீவன மரங்கள் வளா்ப்பு, ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கற்றுத் தரப்படும்.
கரோனா கட்டுப்பாடு நடைமுறைகளைப் பின்பற்றி 20 பேருக்கு மட்டுமே பயிற்சிஅளிக்கப்படவுள்ளது. எனவே, விருப்பமுள்ளோா் கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதியலாம். இல்லையெனில் காலை 10 மணிக்கு நேரில் வந்தும் பங்கேற்கலாம் எனப் பேராசிரியரும், மையத் தலைவருமான வே. ஜெயலலிதா தெரிவித்துள்ளாா்.