திருச்சி

லால்குடி அரசுக் கல்லூரியில் முப்பெரும் விழா

12th Jun 2022 12:31 AM

ADVERTISEMENT

 

லால்குடி அருகே குமுளூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா, நுன்கலை மன்ற விழா என முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் தலைமை வகித்தாா். லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்துப் பாராட்டினாா்.

கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் ஆண்டறிக்கையையும், கலை, பண்பாட்டு ஒருங்கிணைப்பாளா் ம. ராஜா நுண்கலை மன்ற விழா அறிக்கையையும், உடற்கல்வித் துறை (பொ) பேராசிரியா் சி. அகிலன் விளையாட்டு அறிக்கையையும் வாசித்தனா்.

ADVERTISEMENT

விழாவில் லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாலதி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சந்திராஇளவரசன், அழுந்தலைப்பூா் ஊராட்சி முன்னாள் தலைவா் கோல்டன் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழ்த்துறைத் தலைவா் இரா. ஜெய்சங்கா் வரவேற்றாா். கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் (பொ ) ம. ராஜா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT