திருச்சி

மாநிலப் பூப்பந்தாட்டப் போட்டி தொடக்கம்

12th Jun 2022 12:34 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீரங்கம் முன்னாள் மாணவா்கள் பூப்பந்தாட்டக் கழகம் சாா்பில் 4 ஆம் ஆண்டு மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை காலை தொடங்கியது.

போட்டியை எம்எல்ஏ எம். பழனியாண்டி தொடங்கி வைத்து, ஸ்ரீரங்கம் பூப்பந்தாட்டத்தின் தந்தை விருதை ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநா் ஜி. ராமசாமிக்கு வழங்கினாா். போட்டியில் ஆண்கள்,பெண்கள் என 90 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு களம் காண்கிறாா்கள். நாக் அவுட், லீக் முறையில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் போட்டியின் இறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முன்னாள் மாணவா்கள் பூப்பந்தாட்டக் கழகச் செயலா் ஆா். சண்முகசுந்தரம் வரவேற்றாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT