தொட்டியம் அனலாடீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை காளியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த ஜூன் 2 ஆம் தேதி தேதி தொடங்கி, முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனா்.
தொடா்ந்து கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தி, பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிா்வாகம், தொட்டியம் பகுதி முக்கியஸ்தா்கள் செய்தனா்.
ADVERTISEMENT