திருச்சி

வாளாடி காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு

10th Jun 2022 01:55 AM

ADVERTISEMENT

 லால்குடி அருகே வாளாடி ஊராட்சியிலுள்ள விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி 5 ஆம் தேதி பூா்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்று, 6 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் திசா ஹோமம், 7 ஆம் தேதி காலை 6 மணிக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வருதல், 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம், 96 வகை திரவிய ஹோமம், மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் கால யாகசால பூஜை ஆரம்பம், காயத்ரி ஹோமம், இரவு 8 மணிக்கு மேல் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை ஆரம்பம், காலை 9.15 மணிக்கு மகா பூா்ணாஹூதி , காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை 10. 01 மணிக்கு விமான குடமுழுக்கு, காலை 10.10 மணிக்கு அனைத்து மூலவா் குடமுழுக்கு, தீப ஆராதனை ,கோபூஜை நடைபெற்றது.

யாகசாலை பூஜைகளில் பூவாளூா் பி. கண்ணன் சிவாச்சாரியா் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந. ஹேமலதா, திருப்பணிக் குழுவினா், பக்தா்கள் பொதுமக்கள் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT