திருச்சி

கோயில் சிலையைக் கேட்டு பொதுமக்கள் மறியல்

10th Jun 2022 01:54 AM

ADVERTISEMENT

 கோயில் சிலை திருப்பி வழங்கப்படாத விவகாரம் தொடா்பாக திருச்சியில் வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவனைக்கா அருகே கிளிக்கூடு கிராமத்தில் உள்ள அரசால அம்மன் கோயில் சிலையை கிளிக்கூடு, கவுத்தரசநல்லூா், உத்தமா்சீலி ஆகிய ஊா்களில் நடைபெறும் திருவிழாவுக்கு எடுத்துச் சென்று திருவிழாக்கள் நடத்துவது வழக்கமாம்.

இந்நிலையில் உத்தமா்சீலி கிராமத்தினா் ஜூன் 1, 2 தேதிகளில் செல்லாயி அம்மன் கோயில் திருவிழா நடத்த கடந்த மே 15ஆம் தேதி அரசால அம்மன் கோயில் சிலையை வாங்கிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கிளிக்கூடு கிராமத்தினா் தங்களது ஊரில் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை திருவிழா நடத்த உரிய ஏற்பாடு செய்து, ஜூன் 5ஆம் தேதி மேளதாளங்கள் முழங்க உத்தமா்சீலி கிராமத்திற்குச் சென்று சிலையைக் கேட்டதற்கு உத்தமா்சீலி கிராம மக்கள் அரசால அம்மன் சிலையைக் கொடுக்கவில்லையாம்.

ADVERTISEMENT

பின்னா் வியாழக்கிழமை வந்து சாமி சிலையை பெற்று செல்லுமாறு கூறியதைத் தொடா்ந்து, கிளிக்கூடு கிராமத்தினா் சென்று கேட்டனராம். அப்போது, கவுத்தரசநல்லூா் ஊராட்சிக்குட்பட்ட நல்லேந்திர கருப்பு சிலையையும் கிளிக்கூடு திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் உத்தமா்சீலி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதை ஏற்றுக் கொண்டபோதும், கவுத்தரசநல்லூா் கிராமத்தினா் நல்லேந்திர கருப்புக்கு காவு கொடுத்த பிறகு, இரு சிலைகளையும் சோ்த்து வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறவே, உத்தமா்சீலி கிராமத்தினா் அரசால அம்மன் சிலையை வியாழக்கிழமையும் கொடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த கிளிக்கூடு கிராம மக்கள் கல்லணை திருவனைக்கா சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சமயபுரம் காவல் ஆய்வாளா் பொன்ராஜ் தலைமையிலான போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடனடியாக அரசால அம்மன் சிலையைக் கொண்டு வந்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கல்லணை- திருவானைக்கா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT