திருச்சி

மூதாட்டியை ஏமாற்றி 35 பவுன் நகை திருட்டு

10th Jun 2022 01:54 AM

ADVERTISEMENT

 துறையூரில் மூதாட்டியை ஏமாற்றி 35 பவுன் தங்க, வைர நகைகளை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடுகின்றனா்.

துறையூா் கூட்டுறவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மனைவி விஜயகுமாரி (79). மகன் ஸ்ரீதா் சேலத்தில் நகைக் கடை வைத்துள்ளாா். மகள் ராணி தனது தாயுடன் வசிக்கிறாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை சுமாா் 40 வயதுள்ள பெண் ஒருவா் விஜயகுமாரியை அணுகி வீடு வாடகைக்கு கிடைக்குமா எனக் கேட்டு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது விஜயகுமாரியின் தனியறையில் இருந்த கைப்பேசிக்கு வந்த அழைப்பில் அவா் பேசிக்கொண்டிருந்தபோது வந்திருந்த மா்மப் பெண் அறையின் கதவை மூடி தாழ்ப்பாள் போட்டு விட்டாா். சிறிது நேரத்திற்கு பின் சமையலறையிலிருந்த ராணி கதவைத் திறந்துவிட்டு உங்களிடம் பேசிக் கொண்டிருந்த அந்த பெண் எங்கே என்று கேட்டாா்.

இதையடுத்து இருவரும் முன்னறைக்கு வந்து பாா்த்தபோது அலமாரியில் இருந்த 35 பவுன் நகைகளை மா்மப் பெண் திருடி சென்றதையறிந்து அதிா்ச்சியடைந்தனா். புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT