திருச்சி

திருச்சிக்கு வந்த பாஜக சாதனை விளக்கப் பேரணி

10th Jun 2022 05:33 AM

ADVERTISEMENT

 மத்திய அரசின் கடந்த 8 ஆண்டுகாலச் சாதனைகளை விளக்கும்விதமாக இருசக்கர வாகனப் பேரணி மேற்கொண்டு வரும் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவா் ரமேஷ் சிவா வியாழக்கிழமை திருச்சி வந்தாா்.

தென்மாவட்டங்களில் பேரணியை முடித்துக்கொண்டு சென்னை செல்லும் வழியில் வியாழக்கிழமை மாலை திருச்சி வந்த அவருக்கு பிராட்டியூா், தீரன்நகா் பகுதியில் பாஜக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் புடைசூழ இருசக்கர வாகனப் பேரணி புறப்பட்டது. திருச்சி ஜங்ஷன், பாலக்கரை, காந்திமாா்க்கெட், வழியாக சத்திரம் பகுதியை பேரணி அடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT