திருச்சி

ஜூன் 14 முதல் ஜமாபந்தி

10th Jun 2022 01:54 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் ஜூன் 14 ஆம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செய்திக்குறிப்பில் தெரிவித்தது:

திருச்சி மாவட்டத்தில் 1431-ஆம் பசலி ஆண்டிற்கான (2021-2022) வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ஜூன் 14 ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் தொடங்கி நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் மண்ணச்சநல்லூா் வட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா் தலைமையில் மணப்பாறை வட்டத்திலும், வருவாய்க் கோட்டாட்சியா் தவச்செல்வன் தலைமையில் திருச்சி(மேற்கு) வட்டத்திலும் நடைபெறுகிறது.

மேலும் ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி, வட்டங்களில் அந்தந்த வட்டக் கோட்டாட்சியா்கள் தலைமையிலும், திருவெறும்பூா் வட்டத்தில் தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்), திருச்சி கிழக்கு வட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா், மருங்காபுரி வட்டத்தில் தனித் துணை ஆட்சியா், துறையூரில் தனித் துணை ஆட்சியா் (முத்திரைக் கட்டணம்) , தொட்டியத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஆகியோா் தலைமையில் ஜமாபந்தி சம்பந்தப்பட்ட வட்டாட்சியரகத்தில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை வருவாய் தீா்வாய அலுவலரிடம் அளித்து, தங்கள் குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT