திருச்சி

சமயபுரம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

10th Jun 2022 01:55 AM

ADVERTISEMENT

 சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தின் சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில்

கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள், உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

முடிவில் திறக்கப்பட்ட 35 உண்டியல்களிலிருந்து ரூ. 1 கோடியே 9 லட்சத்து 80 ஆயிரத்து 784, 3,729 கிராம் தங்கம், 5, 725 கிராம் வெள்ளி, 140 வெளிநாட்டு ரூபாய்கள் கிடைத்ததாக திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT