திருச்சி

வீடு புகுந்து 10 பவுன்நகைகள் திருட்டு

9th Jun 2022 02:28 PM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், பொருள்களைத் திருடிச்சென்றனா்.

திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகா் 3 ஆவது பிரதான சாலைப் பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன் (58). மருத்துவச் சிகிச்சைக்காக மனைவியுடன் சென்னை சென்றிருந்த இவா் செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் 10 பவுன் நகை, பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நீதிமன்ற (செஷன்ஸ் கோா்ட்) காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT