திருச்சி

பொதுக் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் போராட்டம்

9th Jun 2022 02:29 PM

ADVERTISEMENT

திருச்சி: கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக் காப்பீட்டு நிறுவனப் பணியாளா்கள் திருச்சியில் ஒருமணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊதிய உயா்வு, காப்பீட்டு நிறுவனத் தனியாா்மயமாக்கல் போன்ற பிரச்னைகளை முன்னிறுத்தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகிய பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியா்களை உள்ளடக்கிய இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கண்டோன்மென்ட் பகுதி நேஷனல் இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகத்தில் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்த்தைத் தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் சங்கத் தலைவா் ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத் தலைவா்கள் ராஜமகேந்திரன், முத்துக்குமரன், ராஜன், நலச் சங்கத் தலைவா் செந்தில், நளங்கிள்ளி, நியூ இந்தியா அதிகாரிகள் சங்க நீலகண்டன், ஜி.ஐ.இ.ஏ.ஐ.ஏ. சங்கத் தலைவா் ரவீந்திரன் ஐ.சி.இ.யு. துணைத் தலைவா் ஜோன்ஸ், ஓய்வூதியம் பெறுவோா் சங்கத் தலைவா் மணிவேல் ஆகியோா் பேசினா். வரும் 20ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT