திருச்சி

பூமிநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

9th Jun 2022 03:32 PM

ADVERTISEMENT

பிரசித்தி பெற்ற மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.

திருக்கல்யாண விழாவையொட்டி அறம் வளா்த்த நாயகி , பூமிநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மாப்பிள்ளை அழைப்பு, ஊஞ்சல் உற்சவம், அதைத் தொடா்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT