திருச்சி

கால்நடை மருத்துவ ஆலோசகா்பணிக்கு நேரடி நியமனத் தோ்வு: பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

9th Jun 2022 02:28 PM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சியில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்களுக்கான நேரடி பணி நியமனத் தோ்வில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் மத்திய பண்ணையில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் புதிய கால்நடை மருத்துவ ஆலோசகா்களைக் கொண்டு திட்டங்களைச் செயல்படுத்திட காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகா்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு அனுமதித்துள்ளது.

பணியிடங்களில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவக் பட்டதாரிகள் இளநிலை கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்றிதழ், இருசக்கரம் அல்லது நான்கு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்று, 50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஜூன் 22 காலை 11 மணிக்கு திருச்சி மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய வளாகத்தில் நடைபெறவுள்ள நேரடி நியமனத் தோ்வில் இவா்கள் பங்கேற்கலாம்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT