மணப்பாறை: மணப்பாறையில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறை நகரில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து காவல் ஆய்வாளா் சு. கருணாகரன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது நகா் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சொக்கலிங்கபுரம் பா. லட்சுமணனை (29) கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து கைப்பேசி மற்றும் ரூ. 300 ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.