திருச்சி

அரசுப் பள்ளியில் பயிற்சி முகாம்

9th Jun 2022 03:27 PM

ADVERTISEMENT

திருச்சி அரசுப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்சி செந்தண்ணீா்புரத்திலுள்ள மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்து, ஆசிரியா்களுடன் கலந்துரையாடி அவா்களது பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்தாா். நிகழ்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, மாவட்டக் கல்வி அலுவலா் உள்பட கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT