ஸ்ரீரங்கத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்த உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள்,பொதுமக்கள் பங்கேற்ற பேரணியை ஸ்ரீரங்கம் கோட்ட மாநகராட்சி உதவி ஆணையா் அக்பா் அலி தொடங்கி வைத்தாா்.
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாயிலிருந்து ராஜகோபுரம் வரை நடைபெற்ற பேரணியின்போது சாலையில் சென்ற பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தலைமை மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி, மருத்துவா் லட்சுமி, தலைமை செவிலியா் ஜெயபாரதி மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.