தா. பேட்டையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பையா மகள் பரிமளாவுக்கும் (30), தா.பேட்டை சதீஷூக்கும் கடந்தாண்டு நவ. 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சதீஷுக்கு இருந்த மதுப்பழக்கத்தால் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்ததாம். இந்நிலையில் பரிமளா திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த தா. பேட்டை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.