திருச்சி

‘ரெட்டி கஞ்சம் சாதியை ஓபிசி பட்டியலில் சோ்க்க வேண்டும்’

6th Jun 2022 01:33 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் ஓபிசி பட்டியலில் ரெட்டி கஞ்சம் சாதியை சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு ஓ.பி.ஆா். ரெட்டி நலச்சங்க மாநிலத் தலைவா் சந்திரபோஸ்.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

சென்னையில் அரசினா் தோட்டமாக இருந்ததை ஓமந்தூராா் தோட்டம் எனப் பெயா் வைத்தவா் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதிதான். அந்த இடத்தில் அவருக்குச் சிலை வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் இந்த வளாகத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பி. ராமசாமி ரெட்டியாருக்கும் சிலை நிறுவ வேண்டும்.

மேலும் எங்கள் சமூக மக்களுக்கு முன்பு ரெட்டி கஞ்சம் சான்று வழங்கப்பட்டு வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பல இடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஒரு சில வட்டங்களில் சில பிரச்னைகளைக் கூறி, சான்று வழங்க மறுக்கின்றனா்.

ADVERTISEMENT

எனவே, மீண்டும் எந்தத் தடைகளும் இல்லாமல் ரெட்டி கஞ்சம் என்று சாதிச் சான்றை வழங்க வேண்டும். மத்திய அரசின் பட்டியலில், ஓபிசி பட்டியலில் ரெட்டி கஞ்சம் சாதியை இணைக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருச்சியில் தமிழ்நாடு ஓ.பி.ஆா். ரெட்டி நலச்சங்கம் சாா்பில் நடத்தப்படும் முப்பெறும் விழாவில் பங்கேற்க குடியரசுத் துணைத் தலைவா் எம். வெங்கய்ய நாயுடு, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதல்வா் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் சீனிவாசன், திருச்சி இளைஞரணி செந்தில், மாவட்டத் தலைவா்கள் தருமபுரி கதிா்வேலு, கிருஷ்ணகிரி வடிவேலு, விருதுநகா் மாவட்ட இளைஞரணி சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT