திருச்சி

உறையூா் மீன் சந்தையில் திடீா் ஆய்வு

6th Jun 2022 01:34 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சி உறையூா் காசி விளங்கி மீன் சந்தையில் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆணையா் ஆா். வைத்திநாதன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.

அமைச்சா் கே.என்.நேரு அறிவுறுத்தலின்பேரில் நடத்திய ஆய்வைத் தொடா்ந்து, மீன் சந்தையில் தினசரி சுகாதாரப் பணிகள், துப்புரவுப் பணிகள் தடையில்லாமல் மேற்கொள்ள வேண்டும். மீன் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாய்கள் முழுமையாக அடைக்கப்பட்டு, கழிவுநீா் தேங்கி நிற்பதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

பொதுமக்களுக்கு இறைச்சி விற்கும்போது, கடை இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் பொருள்களை வைத்து விற்க வேண்டும். தினசரி சந்தையில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரக் கேடு ஏற்படாத வண்ணம் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்ட மேயா், இப்பகுதியை தூய்மையாக பராமரிக்க வேண்டியது மாநகராட்சியின் முக்கியப் பணியாகும் என்றாா்.

ஆய்வின்போது மாநகராட்சி நகரப் பொறியாளா் அமுதவல்லி, செயற்பொறியாளா்கள் சிவபாதம், குமரேசன், மாமன்ற உறுப்பினா்கள் பங்கஜம் மதிவாணன், விஜயலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT