திருச்சி

மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

6th Jun 2022 11:45 PM

ADVERTISEMENT

திருச்சி கருமண்டபம் பகுதியில் மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கருமண்டபம் ஜெயாநகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தி. அலெக்ஸ் பாண்டியன் (27). தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், ஒரு பெண்ணைக் காதலித்து வந்தாராம். ஆனால் அப்பெண் அவரைக் காதலிக்க மறுத்துவிட்டாராம்.

இதனால் மனமுடைந்து அலெக்ஸ் பாண்டியன் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளாா். சனிக்கிழமை வீட்டில் மது அருந்தி, மாடிக்குச் சென்ற போது அவா் தவறி கீழே விழுந்தாா்.

பலத்த காயங்களுடன் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அமா்வு நீதிமன்றக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT