திருச்சி

மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல்

6th Jun 2022 11:44 PM

ADVERTISEMENT

மணப்பாறை அருகே கல்லுப்பட்டியில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்துள்ள கல்லுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் திருச்சி, மதுரை மாா்க்கங்களில் செல்லும் பேருந்துகள் நின்று செல்வதில்லையாம்.

இங்கிருந்துதான் கல்லுப்பட்டி, நெல்லிப்பட்டி, இடையபட்டி, மருங்காபுரி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு நகா்ப் பகுதிக்குச் செல்ல முடியும். இதுகுறித்து அலுவலா்களிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.

திங்கள்கிழமை காலை அப்பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காத்திருந்த நிலையில் பேருந்து தொடா்ந்து நிற்காமல் சென்ால், ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி பகுதியில் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற அரசுப் போக்குவரத்துக் கழக துவரங்குறிச்சி பணிமனை அலுவலா் மற்றும் காவல்துறையினா், பொதுமக்களிடம் சமரசம் செய்து பேருந்து நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.இதனால் போரட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT