திருச்சி

அடா்வனக்காடு திட்ட மரக்கன்றுகள் நடவு

6th Jun 2022 01:34 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சி சாா்பில் அடா்வனக்காடு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மேயா் அன்பழகன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனா்.

அமைச்சா் கே.என். நேரு வழிகாட்டுதலின்படி, திருச்சி மாநகராட்சி சாா்பில்  மியாவாகி  அடா்வனக் காடு உருவாக்கும் திட்டம் மாவட்டத்தின் சில இடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகராட்சி, உறையூா் பகுதியில் குழுமணி சாலை, வின்ஸ் அன்பு அவென்யூ அருகில் மாநகராட்சிக்குச் சொந்தமான 11,400 சதுரடி பரப்பளவில் சுமாா் 1000  மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் ஆா். வைத்திநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் நகரப் பொறியாளா் அமுதவள்ளி, செயற்பொறியாளா்கள் சிவபாதம், குமரேசன், மண்டலக் குழுத் தலைவா் விஜயலட்சுமி கண்ணன், மாமன்ற உறுப்பினா்கள் பங்கஜம், மதிவாணன், சுரேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பலரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT