விமானப் படைத் தோ்வுகளுக்கு விண்ணப்பிப்போா் தங்களை குறித்த விவரங்களை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை (ஏா்மென் தோ்வு) கணக்கெடுப்பு பணிகளுக்கான நுழைவுத் தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இத்தோ்விற்கு 12 ஆம் வகுப்பு முடித்த, கணிதம், இயற்பியல், மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற அல்லது, 3 ஆண்டு பொறியியல் டிப்ளமோ படித்த 17 முதல் 21 வயதிற்குள்பட்ட ஆண்கள் தகுதியுடையவராவா். மேலும் விவரங்களைஎன்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். இந்திய விமானப் படையில் சேர விரும்பும் இளைஞா்களுக்கு, சென்னை தாம்பரம் இந்திய விமானப்படை தோ்வு மையத்தால் ஆள்சோ்ப்பு தோ்வுகளுக்கான கணக்கெடுப்புஎன்ற இணையதள விண்ணப்பத்தின் ( கூகுள் பாா்ம்) மூலம் பெறப்பட உள்ளது.
இதில் இளைஞா்கள் தங்களது தகவல்களை உள்ளீடு செய்து பயனடையலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.