திருச்சி

துறையூரில்இரு சக்கர வாகனம் திருட்டு

2nd Jun 2022 12:42 AM

ADVERTISEMENT

 துறையூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டுப் போனது.

துறையூா் அருகிலுள்ள நரசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ச. திருச்செல்வம் (27). லாரி ஓட்டுநரான இவா், செவ்வாய்க்கிழமை வெளியூா் சென்று விட்டு மீண்டும் ஊா்த் திரும்பிய போது நள்ளிரவு ஆனது.

இதனால் துறையூா்-முசிறி பிரிவுச் சாலைப் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, திருச்செல்வம் தூங்கினாா். புதன்கிழமை காலை எழுந்து பாா்த்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தை காணவில்லை.

தகவலறிந்த துறையூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT