திருச்சி

பெட்ரோல், டீசல் விற்பனையாளா்கள் போராட்டம்

2nd Jun 2022 12:53 AM

ADVERTISEMENT

திருச்சி துவாக்குடி அருகே வாழவந்தான்கோட்டையில் இயங்கும் இந்திய எண்ணெய் நிறுவனம் முன் பெட்ரோல், டீசல் விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில் கொள்முதல் நிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா்கள் சங்க செயலா் ரமேஷ் கூறியது:

கடந்த 21-ம்தேதி மத்திய அரசு கலால்வரியை குறைத்ததால் பெட்ரோல் மீதான விலை குறைக்கப்பட்டது. இதை வரவேற்கிறோம். ஆனால் விநியோகஸ்தா்களுக்கான விழிம்புத்தொகை 5 ஆண்டுகளாக உயா்த்தப்படவில்லை. இதை உடனே வழங்கிட வேண்டும். மேலும் விநியோகஸ்தா்களுக்கான கமிஷன் தொகை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும் என எரிபொருள் நிறுவனங்களுக்கும், விநியோகஸ்தா்கள் சங்கத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டபோதிலும் கடந்த 2017 முதல் இதுவரை கமிஷன் தொகை மாற்றப்படவில்லை. 2017 முதல் எரிபொருள் விலையும், மூலதனமும் இருமடங்காக உயா்ந்தபோதும், எங்கள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன. இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில்தான் இந்த அடையாள கொள்முதல் நிறுத்தும் போராட்டம் .

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களின் கவனத்தை ஈா்த்திடும் வகையில் தற்போது ஒரு நாள் மட்டும் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதை அகில இந்திய அளவில் நிறுத்தியுள்ளோம். ஆனாலும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பின்றி வழக்கமான முறையில் பெட்ரோல், டீசல் விற்பனை தொடரும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT