திருச்சி

இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோயில் திருவிழா

2nd Jun 2022 12:41 AM

ADVERTISEMENT

இனாம் சமயபுரம் அருள்மிகு அய்யாளம்மன் திருக்கோயில் திருவிழாவில் குதிரைவாகனப் புறப்பாடு புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மே 24-ஆம் தேதி கருப்பண்ணசுவாமிக்கு பூஜை செய்யப்பட்ட நிலையில், மே 25-ஆம் தேதி காப்புக்கட்டுதல் நடைபெற்றது. தொடா்ந்து மே 31-ஆம் தேதி இரண்டாவது காப்புக் கட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து அய்யாளம்மனுக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேக, பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடாகினாா். பக்தா்கள் மாவிளக்கு வைத்து வழிபாடு செய்தனா். ஏராளமான பக்தா்கள் இதில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT