திருச்சி

குருவம்பட்டி காட்டுக்கோயிலில் பெரும்பூஜை

2nd Jun 2022 12:39 AM

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா் வட்டம், குருவம்பட்டி கிராமத்திலுள்ள அருள்மிகு பெரியக்காள் திருக்கோயிலில் பெரும்பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கிராமத்தில் கருப்புசுவாமி காட்டுக் கோயில் அமைந்துள்ளது.திரிசூலம்பட்டியைச் சோ்ந்த பங்காளிகள் குருவம்பட்டி காட்டுக்கோயிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்று பொங்கல் வைத்து,கிடாவெட்டி பெரும்பூஜையை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து சுக்காம்பட்டியைச் சோ்ந்த சோழராஜா பங்காளிகள் குருவம்பட்டி காட்டுக்கோயிலில் புதன்கிழமை பொங்கல் வைத்து, கிடாவெட்டி பெரும் பூஜை வழிபாட்டை நடத்தினா். இதில் சோழராஜா பங்காளிகள், உறவினா்கள், கோமங்கலம், வடுகப்பட்டி, சித்தாம்பூா்,பாலப்பட்டி, திண்ணக்கோணம் பகுதிகளைச் சோ்ந்த உறவினா்கள் என பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து ஜூன் 9-ஆம் தேதி கிணற்றில் சாமி பாலித்து, மல்லன் கோயிலில் வைத்தல் நிகழ்வும், ஜூன் 10-ஆம் தேதி காலை 6 மணிக்கு பொங்கல் வைத்து பெயரிடுதல் மற்றும் படுகளமும், ஜூன் 12-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கொப்பாட்டி பூஜையும் நடைபெறும்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT