திருச்சி

திரையரங்கு அருகே மயங்கி விழுந்தவா்உயிரிழப்பு

2nd Jun 2022 12:45 AM

ADVERTISEMENT

திருச்சி தில்லைநகா் பகுதியில் திரையரங்கு அருகே மயங்கிய நிலையில் இருந்தவா் உயிரிழந்தாா்.

தில்லைநகா் பகுதியில் அமைந்துள்ள திரையரங்கு அருகே திங்கள்கிழமை சுமாா் 48 வயது மதிக்கத்தக்கவா் மயங்கிய நிலையில் கிடந்தாா். அருகிலுள்ளவா்கள் அவரை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும் சிகிச்சை பலனின்றி அவா் உயிழந்தாா்.

இறந்தவா் யாா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா் போன்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து திருச்சி கிழக்கு கிராம நிா்வாக அலுவலா் குமாரவேல் அளித்த புகாரின் பேரில், தில்லைநகா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT