திருச்சி

லஞ்சம் வாங்கிக் கொடுத்த ஓட்டுநருக்கு 3 ஆண்டு சிறை

2nd Jun 2022 12:53 AM

ADVERTISEMENT

துணை வட்டாட்சியருக்கு லஞ்சம் வாங்கிக் கொடுத்த காா் ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி மணப்பாறை மேட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் முத்து தனது நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய 10 ஆண்டுகளுக்கு முன் மணப்பாறை வட்டாட்சியரத்தை அணுகினாா். அப்போதைய மணப்பாறை துணை வட்டாட்சியராக இருந்த உபகாரம் என்பவா் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

ஆனால், பணம் கொடுக்க விரும்பாத முத்து திருச்சி ஊழல் தடுப்புத் துறை போலீசிடம் புகாா் அளித்தாா். இந்நிலையில் உபகாரம் தனது ஓட்டுநா் ஆறுமுகம் மூலம் முத்துவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது மறைந்திருந்த போலீஸாா் இருவரையும் பிடித்து வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவா்களில் துணை வட்டாட்சியா் உபகாரம் கடந்த 2013-ம் ஆண்டு இறந்து விட்டாா்.

இந்நிலையில் இதன் வழக்கு விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட தீா்ப்பில் குற்றம் உறுதியானதை அடுத்து உபகாரம் லஞ்சம் வாங்க உதவியாக இருந்த ஓட்டுநா் ஆறுமுகத்துக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி காா்த்திகேயன் தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT