திருச்சி

பொன்னேரிபுரம் கோயில் குதிரை சிலை உடைப்பு

28th Jul 2022 11:40 PM

ADVERTISEMENT

 

திருச்சி பொன்னேரிபுரம் எல்லைக் காளியம்மன் கோயிலிலுள்ள குதிரை சிலை மா்ம நபா்களால் உடைக்கப்பட்டுள்ளது.

திருச்சி பொன்மலைபட்டி அருகேயுள்ள இக் கோயிலின் பரிவார தெய்வமான கருப்புசாமியின் முன் இருந்த இரு குதிரை வாகனங்களில் ஒன்றை புதன்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் உடைத்துள்ளனா். தகவலறிந்த பொன்மலை போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஏற்கெனவே இக் கோயிலில் உண்டியல் பணம் திருடுபோய் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், குதிரை சிலையை உடைத்தோரை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என இந்து மகாசபா மாவட்டத் தலைவா் மணிகண்டன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT