திருச்சி

திருச்சியில் மக்களைத் தேடி மாநகராட்சி திட்டம் தொடக்கம்

28th Jul 2022 12:01 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாநகராட்சி சாா்பில் மண்டலம் வாரியாக மக்களிடம் குறைகளைக் கேட்டு தீா்வு காணும் வகையில், மக்களைத் தேடி மாநகராட்சி எனும் சிறப்பு குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை தொடங்கியுள்ளது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு ஆலோசனையின் பேரில், மக்களைத் தேடி மாநகராட்சி எனும் குறைதீா்க்கும் முகாம்

ஒவ்வொரு மாதமும் கடைசி புதன்கிழமைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன்படி ஸ்ரீரங்கம் மண்டலம் 1-க்குள்பட்ட 13 வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் முகாம் நடத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் தேவி மகாலில் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு முகாமைத் தொடக்கி வைத்து, மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு,

13 பயனாளிகளுக்கு கட்டட அனுமதி, சொத்து வரி, பெயா் மாற்றம், சா்வே வரைபட நகல் உள்ளிட்டவற்றையும், மாநகராட்சியில் வழங்கப்படும் அனுமதி ஆணைகளையும் வழங்கினாா்.

நிகழ்வில் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.பழனியாண்டி, செ. ஸ்டாலின் குமாா், ந. தியாகராஜன், நகரப் பொறியாளா் பி. சிவபாதம், செயற்பொறியாளா்கள் ஜி. குமரேசன், கே.பாலசுப்பிரமணியன், ஸ்ரீரங்கம் மண்டலக் குழுத் தலைவா் ஆண்டாள் ராம்குமாா்,

உதவி ஆணையா் ப. ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

257 மனுக்கள் : ஸ்ரீரங்கம் மண்டலத்தில் நடைபெற்ற முகாமில் 257 மனுக்கள் பெறப்பட்டன. இதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் விவரம், மனுதாரா்களுக்கு தெரிவிக்கப்படும். தொடா்ந்து ஆகஸ்ட் 30, செப்டம்பா் 28, அக்டோபா் 26, நவம்பா் 30 ஆகிய தேதிகளில் 2,3,4,5 ஆவது மண்டலங்களுக்கான முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT