திருச்சி

முசிறி அருகே மதுரகாளியம்மன் கோயிலில் 108 புடவைகளால் அலங்காரம் 

28th Jul 2022 05:02 PM

ADVERTISEMENT

திருச்சி:  முசிறி அருகே மதுரகாளியம்மன் கோயிலில் 108 புடவைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் ஆடிமாதத்தில் வெள்ளிக்கிழமைகளிலும், ஆடி அமாவாசை தினத்திலும் சிறப்பு வழிபாட்டையொட்டி பல்வேறு வகையிலான அலங்காரங்கள் அம்பாளுக்கு மேற்கொள்வது வழக்கம். 

அந்த வகையில், இன்று ஆடி அமாவாசையையொட்டி 108 புடவைகளால் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: ஆடி அமாவாசை: வீரராகவர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

ADVERTISEMENT

 

இதேபோல ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முசிறி பகுதியில் விளையும் வெற்றிலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT