திருச்சி

மண்ணச்சநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து சகோதரா்கள் பலி

28th Jul 2022 11:37 PM

ADVERTISEMENT

 

மண்ணச்சநல்லூா் அருகே கோயிலுக்கு வந்த சகோதரா்கள் இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம் அத்தாணி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அரவன் (60), மாரிமுத்து (58). சகோதரா்களான இருவரும் வியாழக்கிழமை அருகிலுள்ள கருப்புக் கோயிலில் சாமி கும்பிட வந்தனா். அப்போது கோயிலருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மாரிமுத்துவும், அவரைக் காப்பாற்ற முயன்ற அரவனும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூா் போலீஸாா் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT