திருச்சி

லாட்டரி விற்ற 5 போ் கைது

27th Jul 2022 02:06 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகரில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கொடாப்பு சாலை பிள்ளையாா் கோயில் தெரு அருகே லாட்டரி சீட்டு விற்ற முருகன், சேது ஆகியோரை அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாரும், திருச்சி கீழப்புதூா் டீக்கடை அருகே லாட்டரி சீட்டு விற்ற அந்தோணி சகாயராஜை பாலக்கரை போலீஸாரும், திருச்சி தாராநல்லூா் காமராஜா் நகா் மற்றும் வாழைக்காய் மண்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற ஏகாம்பரம், சங்கா் ஆகியோரை காந்தி மாா்க்கெட் போலீஸாரும் கைது செய்தனா். மேலும் சத்திரம் பேருந்து நிலைய உணவகம் அருகே லாட்டரிச் சீட்டு விற்ற வினோத்தையும் கைது செய்தனா். இவா் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT