திருச்சி

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

27th Jul 2022 02:09 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கமிட்டித் தலைவா் சோனியாகாந்தி உள்ளிட்டோரை அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருச்சியில் காங்கிரஸாா் சத்தியாகிரகப் போராட்டம் என்ற பெயரில் ஆா்ப்பாட்டத்தை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.

திருச்சியில் தெப்பக்குளம் அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகா் மாவட்ட தலைவா் ஜவகா் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சந்திரன், மாவட்டப் பொருளாளா் ராஜா நசீா், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜெரோம் ஆரோக்யராஜ், திருச்சி வேலுச்சாமி, கள்ளிக்குடி சுந்தரம், மாநில பொதுச் செயலா்கள் வழக்குரைஞா் இளங்கோ, சரவணன்,மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் பேட்ரிக் ராஜ்குமாா், ராஜலிங்கம், கோட்டத் தலைவா்கள் சிவாஜி சண்முகம், ரவி ஜோசப் ஜெரால்டு, ராஜ்மோகன், ஆனந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT