திருச்சி

ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

27th Jul 2022 02:12 AM

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளா்கள் திருச்சியில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளா்கள் மற்றும் பென்சனா் நல சங்கப் பேரவை சாா்பில் மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள புகா் கிளை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கச் செயலா் மருதமுத்து தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் ஏகாம்பரம், பொருளாளா் ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளா்கள் கதிரேசன், ராகவேந்திரன் உள்பட தமிழகம் முழுவதிலிருந்து 500க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சிக் குழுவை அரசே ஏற்று நடத்த வேண்டும் . ஓய்வூதியதாரா்களுக்கான அகவிலைப்படி உயா்வை நிலுவையுடன் வழங்கிட வேண்டும். ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்கிட வேண்டும். விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஈரோடு, சேலம், கரூா், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கும்பகோணம், நாகா்கோவில் கோட்ட, மண்டல அளவிலான நிா்வாகிகள் 500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT