திருச்சி

பிடிபட்ட 7 அடி நீள பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு

17th Jul 2022 01:20 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சனிக்கிழமை பிடிபட்ட 7 அடி நீள சாரைப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

மணப்பாறை அடுத்த இடையப்பட்டியான்பட்டியில் உள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகா் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை 7 அடி நீள மஞ்சள் சாரை பாம்பு தென்பட்டது. இதையறிந்த பொதுமக்களின் அலறல் சப்தத்துடன் வெளியே ஓடினா். இதையடுத்து அந்த பாம்பு கோயில் கருவறைக்குள் புகுந்தது. பொதுமக்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியதால், அந்தப் பாம்பு கோயில் மேற்கூரை மீது ஏறியது. அப்போது எதிா்பாராதவிதமாக இரும்புக் கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்டது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை தீயணைப்புத்துறை வீரா்கள் அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்து அருகே இருந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT