மண்ணச்சநல்லூரில் வணிக வைசியா் சங்கம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வணிக வைசியா் சங்கம் சாா்பில், மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற விழாவில், 6 ஆம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை
பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
விழாவில், 150 மாணவ, மாணவிகளுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், மண்ணச்சநல்லூா் வணிக வைசியா் சங்க நிா்வாகிகள் ஏ.ராதாகிருஷ்ணன், என்.புருஷோத்தமன், பி.ரமேஷ், ஆா். சுரேஷ், திமுக நகர செயலா் த.மனோகரன், சிறப்பு விருந்தினா்கள் பி.ஜெயபிரகாஷ் நாராயணன், ஆா்.ஜோதி ரவி, கே ஜெய்சங்கா், வி.பழனியப்பன், மாணவ, மாணவிகள் பெற்றோா் கலந்து கொண்டனா்.